கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கீழ்குளம் பேரூராட்சியில் உள்ள அரசகுளம் - நுள்ளிவிளை சாலைகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சாலையை காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 6 - லட்சம், காட்டுவிளை - பறம்பு காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 9 - லட்சம், என மொத்தம் ரூ. 15 - லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த சாலையை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம். எல். ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜகிளன், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.