வீட்டு வாசலில் பெண் கழுத்தறுத்துக் கொலை

80பார்த்தது
வீட்டு வாசலில் பெண் கழுத்தறுத்துக் கொலை
சென்னை திருவொற்றியூரில் இன்று (பிப்., 05) வீட்டின் முன் காலை கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அய்யாப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் தனம் (45). இவரது அக்கா மகள் செல்வியின் கணவர் காளிமுத்து. இந்த தம்பதியினர் குடும்பப்பிரச்சனை காரணமாக பிரிந்து வசிக்கின்றனர். இந்த நிலையில், செல்வியை கொலை செய்ய வந்த காளிமுத்து, தடையாக இருந்த செல்வியை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தப்பினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி