டெம்போ டிரைவரை கத்தியால் குத்தி வழிப்பறி முயற்சி

3988பார்த்தது
டெம்போ டிரைவரை கத்தியால் குத்தி வழிப்பறி முயற்சி
வில்லுக்குறி அருகே உள்ள திருவிடைக்கோடு பகுதியை. சேர்ந்தவர் அய்யப்பதாஸ் (வயது44), டெம்போ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு டெம்போவில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஆரல்வாய்மொழி நோக்கி புறப்பட்டார். திருப்பதிசாரம் 4 வழிச்சாலை வந்த போது சுங்கச்சாவடியை யொட்டி சாலையோரமாக டெம்போவை நிறுத்திவிட்டு நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அதற்கு அய்யப்பதாஸ் தண்ணீர் இல்லை என்று சொல்லவே அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கடந்து 3 பேர்மோட்டார் சைக்கிளில் வந்து அதேபோல் தண்ணீர் கேட்டனர். அய்யப்பதாஸ் மீண்டும் இல்லை என்று சொல்லவே அவரிடம் ரூ. 500 கேட்டனர். அவர் பணம் இல்லை என்று கூறியதும் அவர்கள் அய்யப்பதாசிடம் தகராறு செய்தனர்.

அத்துடன் அவரது மார்பில் கத்தியால் குத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அய்யப்பதாஸ் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவரை கத்தியால் குத்தி வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி