குமரி: உலக தாய்மொழி தின போட்டிகள் பரிசளிப்பு விழா.

51பார்த்தது
குமரி: உலக தாய்மொழி தின போட்டிகள் பரிசளிப்பு விழா.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ் மொழிக்கு எல்லாம் தாய் மொழி என்கிற தலைப்பில் பேச்சு போட்டி மற்றும் தமிழ் உலக நாகரிகங்களுக்கு ஊற்று என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டன. இப்போட்டிகளை கன்னியாகுமரி மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி நேற்று தொடங்கி வைத்தார். கவிஞர் மது பிரியா மற்றும் கவிஞர் குமரி உத்ரா ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் கன்னியாகுமரி மாவட்ட காப்பாட்சியர் அவர்களால் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஆசிரியை ஜெயமதி ரொசாரியோ , சமூக ஆர்வலர் சரலூர் ஜெகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :