மோடிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய கனிமொழி

84பார்த்தது
மோடிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய கனிமொழி
அருணாச்சல பிரதேசம் தங்களுக்குச் சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்குள்ள 30 இடங்களுக்கு பெயர்களையும் மாற்றியுள்ளது. இது குறித்து எம்.பி.கனிமொழி இன்று தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நமது நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. தங்களின் ஆதாயத்திற்காக நாட்டின் பாதுகாப்பை பாஜக அடைமானம் வைத்துவிட்டதா? தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறு பரப்பும் மோடி, சீன எல்லைப் பிரச்னை குறித்து எப்போது வாய்திறப்பார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி