விமானத்தில் புகைப்பிடித்த ராமநாதபுரம் பயணி கைது

58பார்த்தது
விமானத்தில் புகைப்பிடித்த ராமநாதபுரம் பயணி கைது
சென்னையில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 174 பயணிகள் அமர்ந்திருந்த நிலையில், விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக, பயணிகளிடம் சீட் பெல்ட் அணியும்படி கூறப்பட்டது. அதன்பின்பு பயணிகள் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா என்று விமான பணிப்பெண்கள் சரி பார்த்தபோது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (30) என்ற பயணி, தனது இருக்கையில் அமர்ந்தபடி புகை பிடித்துக் கொண்டு இருந்தார்.

இதை பார்த்ததும் விமான பணிப்பெண்கள், விமானத்திற்குள் புகை பிடிக்க அனுமதி கிடையாது. எனவே சிகரெட்டை அணையுங்கள் என்று கூறினர். மேலும், அவர் பாதுகாப்பு சோதனையை மீறி எப்படி விமானத்திற்குள் சிகரெட் எடுத்து வந்தார் என்று விசாரிக்க தொடங்கினர். ஆனால் அந்த பயணி, என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது என்று கூறி, தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார். சக பயணிகள் அவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை.

இதனையடுத்து விமான பணிப்பெண்கள், விமான தலைமை விமானியிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து கீழே இறக்கினர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி