உத்திரமேரூர் ஸ்ரீ நூக்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

78பார்த்தது
உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நூக்கலம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைப்பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ. நூக்கலம்மன் ஆலயத்தில் புதிதாக மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு ஆலயத்திற்குள் 27 நட்சத்திரங்கள் மற்றும் நவகிரக ராசி மண்டலம் பிரதிஷ்டை செய்து ஆலய திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, கோபூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இன்று காலை நாடி சந்தானம், தத்வார்ச்சனை, பூர்ணாஹூதி, உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது.

பின்னர் சிவாச்சாரியார்கள் தலைமையில் மேள வாத்தியங்களுடன் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்து விமான ராஜ கோபுரத்தின் மீது புனித கலச நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தேறியது. அதைத்தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்ற நிலையில் பக்தர்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது.

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி