காஞ்சிபுரம் மாவட்டம்
பாஜக தலைவர் கே. எஸ். பாபு தலைமையிலும், மாவட்டத் துணைத் தலைவர் சோழனூர் மா. ஏழுமலை, மாவட்ட பொதுச் செயலாளர் ருத்ரகுமார் ஆகியோர் முன்னிலையிலும், குஜராத் மாநில
பாஜக துணைத்தலைவரும், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை தலைவர் மற்றும் காந்திநகர்
எம்பி ரமீளா பெண் பாரா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகரில்
பாஜக கொடியை அவர் ஏற்றி வைத்து பாரத் மாதா கி ஜே என்று கோஷங்களை எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து ஏராளமான நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்குள்ள
பாஜக தொண்டர் பொன்மொழி என்பவர் வீட்டில் உணவு அருந்தினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் லட்சுமி நாராயணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.