ஜி. எஸ். டி. பில் கொடுப்பதை தவிர்த்து வரி ஏய்ப்பில் வியாபாரிகள்

73பார்த்தது
ஜி. எஸ். டி. பில் கொடுப்பதை தவிர்த்து வரி ஏய்ப்பில் வியாபாரிகள்
உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், கட்டுமான பொருட்கள், வாகனங்கள் என அனைத்து வகையான பொருட்களுக்கும், சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி. எஸ். டி. , வரி, பொருட்களுக்கு ஏற்ற விகிதத்தில் விதிக்கப்படுகிறது. அவ்வாறு, விதிக்கப்படும் வரிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்ற வகையில் பிரித்து, வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.

வணிகர்கள் கட்டாயமாக ஜி. எஸ். டி. , வரி விதிக்க வேண்டும் எனவும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதில், கடையின் ஜி. எஸ். டி. , எண் குறிப்பிட வேண்டும். ஆனால், காஞ்சிபுரத்தில் உள்ள சில கடைகளில், ஜி. எஸ். டி. , வரி விதிக்காமலும், ஜி. எஸ். டி. , எண் குறிப்பிடாமலும், வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கட்டுமான பொருட்களில் ஒன்றான 'டைல்ஸ்' விற்பனை செய்யும் கடைகளில், ஜி. எஸ். டி. , பில் வழங்காமல், கைகளால் எழுதப்பட்ட, 'கொட்டேஷன்' பில்களையே, 'கேஷ் பில்களாக' வழங்குகின்றனர். அதில், ஜி. எஸ். டி. , எண்ணும் குறிப்பிடாமல், வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி