உத்திரமேரூரில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

57பார்த்தது
உத்திரமேரூரில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்புலிவனம், மருத்துவன்பாடி, மல்லிகாபுரம் ஆகிய பகுதிகளில், நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருப்புலிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே, கையில் பையுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின்படி, போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, 4 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. பின், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த குபேந்திரன் (28) என்பது தெரிந்தது.

தொடர்புடைய செய்தி