சென்னை தாம்பரம் காவல் மாவட்டத்தை சேர்ந்த, 5 வயது சிறுமி, 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி, வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (வயது 31) என்பவர், சிறுமிக்கு மீட்டாய் வாங்கி கொடுத்து, பாலியல் ரீதியதாக துன்புறுத்தினார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து, பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், உதயகுமாருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமாபானு நேற்று (செப்.14) தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பின், உதயகுமாருக்கு, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.