"சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு போக்சோ

567பார்த்தது
"சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு போக்சோ
பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 9ம் வகுப்பு மாணவி. இவர் கடந்த டிச. , 25ம் தேதி, கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட, குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள தாய்மாமன் வீட்டிற்கு சென்றார்.

இந்ந நிலையில், மறுநாள் இரவு சிறுமியின் உறவினரான பிச்சிவாக்கத்தைச் சேர்ந்த சந்துருகுமார், 23. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பைக்கில் அழைத்து சென்றார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து திருத்தனி அருகே இருவரரும் இருப்பதை அறிந்த போலீசார், அங்கு சென்று சிறுமியை மீட்டு, சந்துருகுமாரை, 'போக்சோ' சட்டத்தில் கீழ் கைது செய்தனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி