"லோக்சபா தேர்தல் கெடுபிடிகள் கடல்வழியில் பொருட்கள் கடத்தல்?

57பார்த்தது
"லோக்சபா தேர்தல் கெடுபிடிகள் கடல்வழியில் பொருட்கள் கடத்தல்?
லோக்சபா தேர்தல் கட்டுப்பாடுகளால், சாலை பகுதிகளில் தீவிர சோதனை நடக்கிறது. இத்தகைய கெடுபிடிகளால், , வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம், மது, பொருட்களை கடல்வழியில் கடத்தலாம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, தமிழகத்தில், ஏப். , 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

அரசியல் கட்சியினர், வாக்காளர்களிடம் ஓட்டுக்களை கவர, பணம், பொருட்கள் ஆகியவை வழங்குவது வழக்கம். அதை தடுக்க, தொகுதி முழுதும், முக்கிய இடங்களில், பறக்கும் படை ஊழியர்கள், 24 மணி நேரமும் வாகனங்களில் சோதனை நடத்துகின்றனர்.

ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்கின்றனர். கடலோர பகுதியில், அவற்றை சாலை வழியில் கொண்டு செல்லும்போது, தீவிர சோதனையால் நெருக்கடி ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, கடற்பகுதி வழியில் படகில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, கடலோர காவல் குழுமத்தினர் கூறும்போது, ”தேர்தல் தொடர்பாக, கடலில் கண்காணிக்க உத்தரவு ஏதும் இல்லை. எனினும், நாங்கள் கடலில் கண்காணித்து வருகிறோம். அன்னிய படகுகள் சென்றால், மீனவர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். "

தொடர்புடைய செய்தி