சதுரங்கபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர மருத்துவர் அமைக்க வேண்டும் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெகதா மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பற்றாளராக திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணை பொறியாளர் ஜெகதீசன் கலந்து கொண்டார். இதில் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் இயங்கும் துணை மின் நிலையத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும், என்றும் சதுரங்கப்பட்டினத்தில் செயல்படும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கிராம சபை கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன. மேலும் தொழுநோய் விழிப்புணர்வு, சுகாதாரம், மற்றும் மருத்துவமனை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். நிகழ்வில் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் தொழுநோய் மருத்துவ மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன், இடைநிலை சுகாதார செவிலியர் ஷகிலா, ஊராட்சி செயலர் வேதாசலம் உள்பட வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.