செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் லதா தம்பதினர். இவர் ஆட்டோ ஓட்டுப் தொழில் செய்து வருகிறார். 12 வருடங்களுக்கு முன்பு வீட்டின் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் சஞ்சனா என்ற மகளும் ஆறு வயதில் சோஷீகா இன்று மகளும் இருந்து நிலையில் மீண்டும் லதா கர்ப்பம் அடைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு லதாவை குழந்தை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அப்பொழுது கணவன் மனைவி இருவரும் இனிமேல் எங்களுக்கு குழந்தை வேண்டாம் என கூறி குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன்செய்வதற்கு கையெழுத்து போட்டு உள்ளனர்.
அதன் பிறகு அருவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அங்கு லதாவுக்கு ஆப்ரேஷன் செய்ததால் தையல் மருத்துவரால் போடப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கிய நிலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு லதா வந்துள்ளார்.
வந்த சிறு நாட்களிலே லதாவுக்கு போடப்பட்ட தையல் பிரிந்து சிதிலமடைந்து காணப்பட்டுள்ளது. மிகவும் அவதிப்பட்ட லதா மீண்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கபட்ட நிலையில் போடப்பட்ட தையலை அகற்றிவிட்டு மீண்டும் தையல் போட்டதால் கடந்த ஒரு மாத காலமாக கடும் அவதி அடைந்து வருகிறார்.
இதை அடுத்தது மீண்டும் அந்த பெண் கர்ப்பம் அடைந்து உள்ளார்.