மதுராந்தகம் அருகே இரண்டு நாள் பெய்த மழையால் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து நாசம் விடியற்காலை என்பதால் விபத்து இல்லாமல் தவிர்க்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விராலூர் ஊராட்சியில் வெட்டுக்காடு கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் பருவமழை காரணமாக இரண்டு நாள் பெய்த மழையால் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 30, 000 கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி திடீரென இடிந்து விழுந்து நாசமானது விடியற்காலையில் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் இன்றி தவிர்க்கப்பட்டது இருப்பினும் இந்த கிராமம் இந்த குடிநீரை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர் இன்று காலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கப்பட்டனர் உடனடியாக அரசு அதிகாரிகள் குடிதண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.