செய்யூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதியதில் 6 பயணிகள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இருந்து அரசு பேருந்து தடம் எண் (டி7) 10 பயணிகளை ஏற்றிக்கொண்டு செய்யூர் நோக்கி வந்துக்கொண்டிருந்தது செய்யூர் அடுத்த விளங்கனூர் அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர தடுப்பின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தின் இடதுபக்க முன் சக்கரம் கழண்டு ஓடிய நிலையில் பேருந்தில் பயணித்த 6 பெண்கள் காயமடைந்தனர். இதில் இருவர் பலத்தகாயமடைந்த நிலையில் 6 பேரும் செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் சக்கரம் கழண்ட நிலையில் பேருந்தை தடுப்பு தாங்கி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.