செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், சப் - கலெக்டர் அலுவலகம், எஸ். பி. , அலுவலகம், செங்கல்பட்டு நீதிமன்றம் உள்ளிட்டவை உள்ளன.
மேலும், கடந்த ஜனவரி மாதம், மலையடிவேண்பாக்கம் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த அலுவலக வளாகத்திற்கு, அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களும் இடம் மாறின.
இந்த அலுவலகங்களுக்கு, செங்கை புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு சேவைகள் பெற வந்து செல்கின்றனர்.
மேற்கண்ட அலுவலகங்களுக்கு வரும் மக்கள், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து மாற்று பேருந்து ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோக்களை நாடும் சூழல் உள்ளது.
எனவே, புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகளை, கலெக்டர் அலுவலகம் வரை நீட்டிக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகரப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.