போக்குவரத்துக்கு இடையூறு மின்கம்பம் இடமாற்றம் செய்ய கோரிக்கை

58பார்த்தது
போக்குவரத்துக்கு இடையூறு மின்கம்பம் இடமாற்றம் செய்ய கோரிக்கை
கோனேரிகுப்பம் ஊராட்சி, ரமணா அவென்யூ விரிவாக்கம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்நிலையில், சரோஜினி தெருவில், புதிய குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 22 அடி அகலம்கொண்ட சரோஜினி தெருவில், சாலையோரம் அமைக்க வேண்டிய இரு மின்கம்பங்கள், மாறாக சாலையில், சாலை அகலத்தின் விளிம்பு பகுதியில் இருந்து, 5 அடி உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதில், ஒரு மின்கம்பம், சாலை வளைவில் உள்ளதால், அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு தேவையான கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் திரும்பும்போது சிரமம்ஏற்படுகிறது.

எனவே, ரமணா அவென்யூ விரிவாக்கம், சரோஜினி தெருவில், 22 அடி அகலமும், சாலை வளைவு பகுதியில், 30 அடி அகலமும் உள்ளது.

மின்வாரிய அதிகாரிகள்சாலையின் அகலத்தை மீண்டும் அளவீடு செய்து, சாலை விளிம்பில் இருந்து, 5 அடி உட்புறமாக அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி