மாமல்லபுரம் அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு ஆய்வு மேற்கொண்டார்
மாமல்லபுரம் அருகே பேரூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 4 ஆயிரத்து 276 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பேரூரில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.