காஞ்சிபுரம் மாநகராட்சி , தாயார் குளம், எம். ஜி. ஆர். , நகர் கிழக்கு பகுதியில் ரேணுகாம்பாள் கோவிலில், 22ம் ஆண்டு ஆடித்திருவிழா 23ம் தேதி இரவு 8: 00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை 10: 00 மணிக்கு அம்மன் பூங்கரம் வீதியுலாவும், மதியம் 12: 00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 3: 00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. இரவு 9: 00 மணிக்கு முத்துவேல் கலைக்குழுவினரின் பம்பை, உடுக்கை, சிலம்பாட்டத்துடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ரேணுகாம்பாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபராதனை காண்பித்து வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் , விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.