மறைமலைநகரில் கனரக வாகனங்களுக்கு தடை

85பார்த்தது
தீபாவளி பண்டகையை முன்னிட்டு கடந்த புதன் மற்றும் வியாழன் அன்று சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தென் மாவட்டத்தை நோக்கி சென்றனர்

தற்பொழுது தொடர் விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் ஆகியவை திங்கட்கிழமை என்பதால் இயங்க உள்ளதால் தற்பொழுது தென் மாவட்டத்திலிருந்து சென்னையை நோக்கி மக்கள் ஒரே நேரத்தில் படையெடுக்க துவங்கியுள்ளனர்

தற்பொழுது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை சந்திப்புகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதனால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது

அதேபோல சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருந்து சென்னை நோக்கி கனரக வாகனங்கள் செல்வதற்கு நாளை மதியம் 2 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது அதற்கு மாற்று பாதையாக ஒரகடம் வழியாக சென்று ஸ்ரீபெரும்புதூர் பைபாஸ் வழியாக செல்லலாம் எனவும் போலீசார் பதாகைகள் அமைத்தும் ஒலிபெருக்கி மூலமும் அறிவுறுத்தி வருகின்றனர்


இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்னை நோக்கி சென்ற வண்ணம் உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி