மாமல்லபுரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. மழலையர் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இங்கு வகுப்பறை கட்டடங்கள், தேவைக்கேற்ப இல்லை. குறுகிய இட நெருக்கடியில் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர், ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இதை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம், அதன் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், கூடுதல் கட்டடம் கட்ட பரிந்துரைத்து, அனுமதியும் வழங்கியது.
இதையடுத்து, நிலைய நிர்வாகம், 1. 47 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்ட, கடந்த ஜன. , யில், பூமி பூஜையுடன் கட்டுமான பணிகளை துவக்கியது.
தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் ஆகியவற்றில், தலா இரண்டு வகுப்பறைகளுடன், இக்கட்டடம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகளை முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு துவக்கப்பட உள்ளதாக, அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.