ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வுகள் இன்று (நவ.30) ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் 14ஆம் தேதி இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் புயலால் சென்னையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.