16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை - செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம் செயயூர் அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் மணிகண்டன் (25) இவர் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பங்கலா மலை பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று வண்டலூர் அருகே இரணியம்மன் கோவிலில் தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது
இதனை தொடர்ந்து 16 வயது சிறுமியின் உறவினர் ராஜன் என்பவர் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார் வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி குற்றவாளி மணிகண்டனுக்கு ஏழு அண்டுகள் சிறை தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார் இதனை தொடர்ந்து குற்றவாளி மண்கண்டனை பலத்த போலீசார் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 16 சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.