காஞ்சிபுரம் மாநகராட்சி, 28வது வார்டு, அண்ணா நகர் எல்லப்பன் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி தெருவில் தேங்கி இருக்கிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் விசுகிறது. தெரு வழியாக செல்வோர், கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி, கழிவு நீர் தெருவில் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.