திமுக நிர்வாகி அடாவடி பேச்சு...

81பார்த்தது
நான் வைப்பது தான் சட்டம் நான்தான் பெரிய ஆளு என வாலாஜாபாத் திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் பேச்சால் பரபரப்பு நியாய விலை கடை கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடும் இடத்தில் திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர்க்கும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் இடையே வாக்குவாதம் தடுத்து நிறுத்திய காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய கட்டுமான பணிக்கு பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வரதன் ஏற்பாட்டில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்காக பூமி பூஜை பணி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்துள்ள வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர், திமுக உறுப்பினர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். ஏற்கனவே இவர்களுக்கு நீண்ட காலமாக முன்பகை இருப்பதாகவும் இதனால் அவ்வப்பொழுது ஒரு நிகழ்ச்சி நடைபெறும் பொழுது சண்டை சச்சரவுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். .