செங்கல்பட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

76பார்த்தது
தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் விடுமுறை என்பதால் அதிக அளவிலான பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கிச் அதிக அளவில் இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் சென்றனர்

இந்நிலையில் விடுமுறை கழித்து அதிக அளவில் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்

இதன் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன


அதேபோல் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்ற வருவதால் இந்த போக்குவரத்து நெரிசானது ஏற்பட்டுள்ளது

தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் விரைவாக வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளஆத்தூர் மற்றும் பரனூர் சுங்கச்சாவடிகளில் இருந்து சென்னை செல்ல சுமார் 2 மணி நேரத்தில் தாமதமாக செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி