செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நத்தம் கரியச்சேரி முள்ளிகொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நத்தம் கரியச்சேரி ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவருமான கரியச்சேரி சேகர் ஏற்பாட்டில் திமுக வேட்பாளர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக காஞ்சி வடக்கு மாவட்ட செயலரும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா மோ அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார் பொது மக்களிடையே பேசியவர் அருகாமையில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் எனவும் நிலா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து செல்வத்தை பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் பிரச்சாரத்தின் போது திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ வுமான வீ தமிழ்மணி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை பொது குழு உறுப்பினர் செல்வகுமார் அலமேலு என்டர்பிரைசஸ் உரிமையாளர் கே சுரேஷ் ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட திமுகவினர் பலர் உடனிருந்தனர்.