பஸ்சில் இறந்த முதியவர் உடலை சாலையில் வீசிய டிரைவர் டிஸ்மிஸ்

60பார்த்தது
பஸ்சில் இறந்த முதியவர் உடலை சாலையில் வீசிய டிரைவர் டிஸ்மிஸ்
செங்கல்பட்டு அருகே, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வடமாநில முதியவர் சடலம் கிடப்பதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை சோதனை செய்த போது, அதில் விக்கிரவாண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை செல்லும் அரசு பேருந்து டிக்கெட் இருந்தது.

உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பீமாராவ், 60, என்பதும், விக்கிரவாண்டியில் தங்கி, மூன்று ஆண்டுகளாக கூலி வேலை பார்த்து வந்ததும் உறுதியானது.

மேலும் விசாரித்ததில், உடல்நிலை பாதிப்பு காரணமாக, சொந்த ஊர் செல்ல, கடந்த 6ம் தேதி இரவு, விக்கிரவாண்டியில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில், பீமாராவ், தன்னுடன் வேலை பார்த்த, தன் ஊரைச் சேர்ந்த அசோக்குமார் ஓமான், 19, கஜுனுகொடோபி, 20, ஆகியோருடன் வந்துள்ளார்.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகில் வந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, பீமாராவ் பேருந்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குணசேகரன், விசாரணைக்கு பின், நேற்று முன்தினம், ( செப்டம்பர் 11) தற்காலிக டிரைவர் ராம்குமாரை டிஸ்மிஸ் செய்தும், நடத்துனர் ரசூல் ரகுமானை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி