புது காவல் நிலையம் ; போலீசார் வேண்டுகோள்

82பார்த்தது
புது காவல் நிலையம் ; போலீசார் வேண்டுகோள்
குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோரம், குன்றத்துாரில் 1983ல் காவல் நிலையம் கட்டப்பட்டது. குற்றம் சட்டம் ஒழுங்கு என இரண்டு ஆய்வாளர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர்.
கட்டடம் 41 ஆண்டுகள் பழமையானதால், கூரை சேதமாகியுள்ளது. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் கசிந்து சொட்டுவதால், ஆவணங்கள் பாழாகின்றன.

சிறிய அளவு சேதங்களை, தங்கள் பணத்தை செலவிட்டு போலீசாரே சீரமைக்கின்றனர். ஆனால், கட்டடத்தின் உறுதி தன்மை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்த கட்டடத்தை இடித்து அகற்றி, நவீன வசதிகளுடன் புதிய காவல் நிலைய கட்டடம் கட்ட வேண்டும் என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி