திருக்கழுக்குன்றம் அடுத்த புலிக்குன்றம் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை அடுத்து திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி ரிப்பன்வெட்டி திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புலிக்குன்றம் பகுதியில் தாட்கோ சார்பில் 1 கோடியே 55 லட்சம் மதிப்பில் ஆறு வகுப்பறைகள் மற்றும் நவீன கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்ட அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி கட்டிடத்தினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை அடுத்து திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர் டி அரசு ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வைஜயந்தி திருக்கழுக்குன்றம் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் ஊராட்சி மன்ற தலைவர் கனகம்மாள் திமுக தலைமை பொது குழு உறுப்பினர் செல்வகுமார் விசிக ஒன்றிய செயலாளர் இ சி ஆர் அன்பு ஒன்றிய பொருளாளர் சண்முகசுந்தரம் ஊராட்சி செயலர் முருகன் உள்ளிட்டோருடன் தாட்கோ அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.