மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்.

77பார்த்தது
பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்.

கொளுத்தும் வெயிலில் ஏராளமாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்!

பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம் இன்று நடந்தது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 108 வைணவ தலங்களில் 63-வது திவ்ய ஸ்தலமாக விளங்கும் தலசயன பெருமாள் கோயில் உள்ளது, இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாள் விழாவில் இன்றைய தினம் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் தலசயன பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாளித்தார். மாமல்லபுரம் முக்கிய மாட வீதிகள் வழியாக சென்ற தேரினை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா. கோவிந்தா. என கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து பெருமாளை கற்பூர ஆராதனையுடன் தரிசனம் செய்து வணங்கினர்.

தொடர்புடைய செய்தி