குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பாரேரி கிராமவாசிகள் மனு

62பார்த்தது
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பாரேரி கிராமவாசிகள் மனு
சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, 12வது வார்டு பாரேரி கிராமத்தில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று கலெக்டர் அருண்ராஜிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவின் விபரம்:

சிங்கபெருமாள் கோவில் 12வது வார்டில், 25 தெருக்களில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், ரேஷன் கடை அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, கடந்த ஆண்டு சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இதுவரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாமல், எங்கள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி