கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

77பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் ஏஜி சர்ச் பின்புறம் வசித்து வருபவர் முனுசாமி இவரது மகன் அருண் (22) மற்றும் அவரது உறவினர வேதகிரி என்பவரது மகன் மணிகண்டன்(24) இவர்கள் இருவரும் சென்னையில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் மணிகண்டன் மீது இரண்டு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அருண் மீது மதுரையில் தனது சொந்த மாமியாரை தன்னந்தனியாக கொலை செய்துள்ளார். மாமியாரை கொலை செய்த வழக்கு உள்பட5வழக்குள் நிலுவைவையில் உள்ளது. இந்நிலையில் இருவரும் வல்லம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக செங்கல்பட்டு தாலுகா தாலுகா காவல்நிலையத்
திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீசார் தேடி சென்றனர். இருவரும் பாரதிபுரம் செல்லும் ஆலன் சாலையருகே கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்து அவர்களை போலீசார் நெருங்குவதை கண்டதும் தப்பியோட முயற்சித்து எதிரில் உள்ள பாழடைந்த பங்க்ளா காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தனர்.

அதில் இருவரும் பாறையில் விழுந்து காலில் பலமாக அடிபட்டு இருவருக்கும் கால்முறிவு ஏற்ப்பட்டது. அவர்களை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து மாவுக்கட்டு போட்டு சிகிச்சை முடிந்தவுடன் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி