கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு குறித்து பயிற்சி முகம்

55பார்த்தது
கீழ் அத்தியவாக்கம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு குறித்து பயிற்சி முகம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கீழ் அத்தியவாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவர் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு குறித்து பயிற்சி முகம் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையம்மாள் கோவிந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பாக அழைப்பாளர்களாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் முனைவர் குமரவேலு உதவி பேராசிரியர் முனைவர் கீதா
மற்றும் துரைராஜன்
ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது ஆடு, மாடுகளுக்கு தீவனம் எவ்வாறு கொடுப்பது குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டுவது குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கிராமப்புற பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி