கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த எடையூர் ஊராட்சி மக்கள்

73பார்த்தது
வரவு செலவு கணக்கில் முறைகேடு உள்ளதால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த எடையூர் ஊராட்சி மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு அம்பேத்கர் பகுதி மீனவர் பகுதி என மூன்று பகுதிகளிளும் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம் ஆனால் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட மக்கள் பங்கேற்காததால் ஊராட்சி மன்ற தலைவர் சாமுண்டீஸ்வரி மற்றும் ஊராட்சி செயலர் மோகன் மட்டுமே கூட்டத்தில் இருப்பதால் கிராம சபை கூட்டத்திற்கு வந்த மக்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் மூன்று வார்டு உறுப்பினர்களும் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பியதுடன் வரவு செலவு கணக்கு பேனரில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஏன் இல்லை என்றும் அந்த மூன்று மாதத்தில் என்னென்ன திட்டங்கள் ஊராட்சி மன்றத்தால் நிறைவேற்றப்பட்டது என அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பினர் இதற்கு பதில் எதுவும் சொல்லாமல் ஊராட்சி மன்ற தலைவர் சாமுண்டீஸ்வரி மற்றும் ஊராட்சி செயலர் மோகன் ஆகியோர் அமைதி காத்தனர், வரவு செலவு கணக்கில் குளறுபடிகள் அதிகம் உள்ளதாக கூறி கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.

தொடர்புடைய செய்தி