கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்

50பார்த்தது
கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.

இதில், எஸ். பி. , சாய் பிரணீத், கலால் உதவி ஆணையர் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், எஸ். பி. , சாய் பிரணீத் பேசியதாவது:

கள்ளச்சாராயம் குடித்தவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களை பரிசோதனை செய்து அறிக்கை பெற, சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வோரை பிடிக்கும் பணியோடு, இது போல ரத்த பரிசோதனை அறிக்கை பெறவும் போலீசார் அலைய வேண்டியுள்ளது. இதனால், போலீசாருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது.

அதனால், சாராயம் குடித்தவர்களின் ரத்த பரிசோதனை செய்யும் பணியை, செங்கல்பட்டு மருத்துவ குழுவினரே மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணியிலும், குற்றவாளிகளை பிடிக்கும் பணியிலும், போலீசார் முழுமையாக ஈடுபட முடியும்.

தொடர்புடைய செய்தி