ஆரநேரியில் குட்கா பறிமுதல்

68பார்த்தது
ஆரநேரியில் குட்கா பறிமுதல்
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆரநேரி கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, மாவட்ட மது விலக்கு அமலாக்கத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, மது விலக்கு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, ஆரநேரியில் உள்ள கடை ஒன்றில் சோதனையில் ஈடுப்பட்டனர்

அதில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, 75, 000 ரூபாய் மதிப்பிலான, 20 கிலோ குட்காவை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார், கடையின் உரிமையாளர் அலமேலு, 46, கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி