காஞ்சிபுரம் அடுத்த, சிங்காடிவாக்கம் கிராமத்தில் இருந்து, சின்னையன்சத்திரம் வரை, இருவழி சாலை இருந்தது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, சிங்காடிவாக்கம், அத்திவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சுற்றி, பல தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன.
இதனால், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 21. 50 கோடி ரூபாய் செலவில், 2021ம் ஆண்டு, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி, 2022ம் ஆண்டு நிறைவு பெற்று, பயன்பாட்டில் உள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைமற்றும் சின்னையன்சத்திரம் - தொழில் வழித்தட சாலை முகப்பில், இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
வாகனங்கள் நாள் கணக்கில் சாலையில் நிறுத்தப்படுவதால், பிற வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளன. மேலும், ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தும் போது விபத்துஏற்படும் அபாயம்உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, சாலையோரம் நிறுத்தப்படும் இடையூறு வாகனங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது