அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

80பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்சுற்றி உள்ள பகுதிகளில் நடத்த ஒரு வார காலமாக பகல் நேரத்தில் வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் இரவு நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது
சுமார் பத்து நாட்கள் மேலாக பெய்த கனமழையால் நீர்நிலைகள்நிரம்பி வருகின்றன இந் நிலையில் பூமியும் குளிர்ச்சடைந்தது இதுவரை வரலாறு காணாத வகையில் இந்த மாதத்தில் மழை பெய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
தற்பொழுது மொறப்பாக்கம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது இந்நிலையில் இரவு ஒரு மணியிலிருந்து விடிகாலை 5 மணி வரை கொட்டி தீர்த்த கனமழையால் நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி முழு சேதம் அடைந்தது சாலைகளிலும் கால்வாய்களிலும் நீர் பெருக்கெடுத்துஓடியது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப அறுவடை நேரத்தில் பெய்த மழையால் விளைந்து நிற்கும் நெல் பயிர்கள் கைக்கு கிட்டவில்லை என விவசாயிகள் பெறும் வேதனை அடைந்துள்ளனர் ஒரு ஏக்கருக்கு சுமார் 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதால் அரசாங்கம் தங்களுக்கு உரிய நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி