தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணிகளை புறக்கணிப்பு

81பார்த்தது
படூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணிகளை புறக்கணிப்பு.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தும் வகையில் மத்திய பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் படூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒரு நாள் மருத்துவமனை பணியை புறக்கணித்தனர் மருத்துவமனை நுழைவாயிலில் முன்பு முதன்மை மருத்துவர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து கையில் கருப்பு கொடி ஏந்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கண்டனத்தை அமைதியான முறையில் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி