அங்கன்வாடி நுழைவாயிலில் சகதி நீர்

62பார்த்தது
அங்கன்வாடி நுழைவாயிலில் சகதி நீர்
காஞ்சிபுரம் ஓ. பி. , குளம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இம்மையத்தின் நுழைவாயில் பகுதி தாழ்வாக உள்ளதால், சாதாரண மழைக்கே, வெளியேற வழியின்றி குட்டை போல தேங்கும் மழைநீர், சகதிநீராக மாறியுள்ளது.

இதனால், குழந்தைகள் சகதியில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, ஓ. பி. , குளம் தெரு, அங்கன்வாடி மையம் நுழைவாயிலில் தேங்கியுள்ள சகதிநீரை அகற்றவும், மீண்டும் அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி