மதுராந்தகத்தில் 43 அடி உயர நரசிம்மர் சிலைக்கு கும்பாபிஷேகம்

80பார்த்தது
மதுராந்தகத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் உள்ள 43 அடி உயர உக்கிர நரசிம்மர் சிலைக்கு புனித நீர் ஊற்றி
மகா கும்பாபிஷேக விழா



செங்கல்பட்டு மாவட் டம், மதுராந்தகம் நகரில் உள்ள சூரக்குட்டை ஸ்ரீலட் சுமிநரசிம்ம சுவாமி கோயிவில் 25-ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த விழாவை யொட்டி
கடந்த புதன்கிழமை மாலை மங்கல இசையுடன் தொடங்கிய
கும்பாபிஷேக விழாவில் எஜமானர் சங்கல்பம், பக வத்பிரார்த்தனை, புண்யா சானம், அங்குரார்பனம், வாஸ்துசாந்தி, யாகபூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, இன்று விஸ்வரூபம், கும் பாராதனம், யாக பூஜை. கும்பம் புறப்பாடு உள் னிட்ட பூஜைகளுடன் கோபுர கல சங்களுக்கும் 43 அடி உயர உக்கிர நரசிம்மர் சிலைக்கு
பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று பின்பு மகா தீபாரதனை நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்மர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி வேணுதாஸ் சாமிகள் உள்ளிட்ட விழா குழுவினர் செய்து சிறப்பாக செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி