மண்ணிவாக்கம் சாலைகள் சீரமைக்கும் பணி துவக்கம்

84பார்த்தது
மண்ணிவாக்கம் சாலைகள் சீரமைக்கும் பணி துவக்கம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம், காரணைபுதுச்சேரி ஊராட்சி சாலைகளை சீரமைக்கும் பணி, நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.

அதில், மண்ணிவாக்கம் ஊராட்சி, சண்முகா நகர் விரிவு இரண்டு பகுதியில், 300 மீட்டர் அளவில் உள்ள சாலையை, 18. 42 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் கல் சாலையாக அமைக்கும் பணி நடந்தது.

செங்கல்பட்டு தொகுதி தி. மு. க. , - எம். எல். ஏ. , வரலட்சுமி, மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவி கெஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று, பூமி பூஜை செய்து சாலை பணிகளை துவங்கி வைத்தனர்.

தொடர்ந்து, காரணைபுதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பிரதான சாலையை சீரமைத்து, சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணிக்கு, 41. 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கப்பட்டன.

துவங்கப்பட்டுள்ள சாலை பணிகளை, இரண்டு மாத காலத்திற்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி