அச்சரப்பாக்கம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக 10 கிராமங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக கழனிபாக்கம், வைப்பனை, பெரும்பாக்கம், சித்தாத்தூர், வெள்ள புத்தூர், விநாயகநல்லூர், வலையபுத்தூர், வேடந்தாங்கல், சித்திரைகுடம் ஆகிய கிராமங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி PCC மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் மற்றும் அச்சரப்பாக்கம் வடக்கு வட்டார தலைவர் வழக்கறிஞர் அரிபிரசாத் ஆகியோர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் , ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் கந்தசாமி , மகிலா காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வேல்விழி, கருங்குழி பேரூர் தலைவர் முகமது ஜாவித், மதுராந்தகம் வட்டார தலைவர் சத்தியசீலன்
உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.