மேடவாக்கம் காவல் நிலையத்தில் எப். ஐ. ஆர். , பதிவுக்கு வழியில்லை

72பார்த்தது
மேடவாக்கம் காவல் நிலையத்தில் எப். ஐ. ஆர். , பதிவுக்கு வழியில்லை
தாம்பரம் மாநகர காவல் ஆணையகரம், 2022ல் உருவாக்கப்பட்டபோது அதன் கீழ் 20 காவல் நிலையங்கள் இருந்தன.

தொடர்ந்து, நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கரணை காவல் நிலையத்தை பிரித்து, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஊராட்சிகளை உள்ளடக்கி, மேடவாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது.

கோவிலம்பாக்கத்தில் கட்டப்பட்ட மேடவாக்கம் புதிய காவல் நிலையம், இம்மாதம் 18ல் திறக்கப்பட்டது. இந்நிலையத்தில், போதிய வசதிகள் இல்லாததால், புகார்தாரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

புகார்தாரர்கள் கூறியதாவது:

மேடவாக்கம் புதிய காவல் நிலையத்தில், வழக்கு பராமரிப்பு ஏடுகள், எப். ஐ. ஆர். , பதிவு செய்வதற்கான கணினி உள்ளிட்ட சாதனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

இதனால், புகார் அளிப்போர் பள்ளிக்கரணை காவல் நிலையம் சென்று வழக்கு பதிந்து, மீண்டும் இங்கு வரவேண்டிய நிலை உள்ளது.

இந்த காவல் நிலையம் கோவிலம்பாக்கத்தில் உள்ளதால், மேடவாக்கத்திலிருந்து 3 கி. மீ. , பயணித்து இங்கு வந்து புகார் அளித்தால், மீண்டும் பள்ளிக்கரணை காவல் நிலையம் சென்று புகாரை பதிவு செய்து, மீண்டும் கோவிலம்பாக்கம் வரவேண்டி உள்ளது.

தொடர்புடைய செய்தி