"குடிநீர் தொட்டி குழாய் சேதம்

63பார்த்தது
"குடிநீர் தொட்டி குழாய் சேதம்
காஞ்சிபுரம் மாநகராட்சி சர்வதீர்த்தம் தென்கரையில், 2015ல் சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

அப்பகுதிவாசிகள் வீட்டு உபயோக கூடுதல் தேவைக்கு குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஆழ்துளை குழாயில் இருந்து, குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் குழாயில் இணைப்பு துண்டிக்கப்பட்டு, 'டம்மி' போடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இதனால், இப்பகுதியினர் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, குடிநீர் தொட்டிக்கும், ஆழ்துளை குழாய்க்கும் இணைப்பு ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி