சமன்படுத்த மண் எடுப்பதால் நெடுஞ்சாலையோரம் பள்ளங்கள்

73பார்த்தது
சமன்படுத்த மண் எடுப்பதால் நெடுஞ்சாலையோரம் பள்ளங்கள்
அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள பள்ளங்கள் மற்றும் சாலையின் மட்டத்திற்கு குறைவாக உள்ள பகுதிகளில், மண் கொட்டி சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது, ஆத்துார் சுங்கச்சாவடி பகுதி நெடுஞ்சாலை ஓரங்களில், ஜே. சி. பி. , இயந்திரங்கள் வாயிலாக புற்களை அப்புறப்படுத்தி, அப்பகுதியில் இருந்து மண் அள்ளி சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதனால், சாலையில் இருந்து 2 மீட்டர் துாரத்திற்குள், 5 முதல் 10 அடி ஆழம் வரை பள்ளங்கள் ஏற்படுகின்றன.

அதனால், சாலை ஓரத்தில் செல்லும் வாகனங்கள், சாலையில் இருந்து மண் பகுதிக்கு கீழே இறங்கி, பள்ளங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.

எனவே, சாலையோரம் உள்ள செடிகள், புற்களை மட்டும் அப்புறப்படுத்தி, வெளிப்பகுதியில் இருந்து மண் கொண்டு வந்து சமன்படுத்த, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி