காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், ஆற்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மாடு வளர்ப்போர், தங்களது மாடுகளை வீட்டில் கொட்டகை அமைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக வெளியே அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.
மேய்ச்சலுக்காக உலாவும் மாடுகள், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள உத்திரமேரூர் - -காஞ்சிபுரம் பிரதான சாலையை மறித்து நிற்பதோடு, குறுக்கும் நெடுக்குமாக மிரண்டு ஓடுவதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, ஆற்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.